tamilnadu

img

சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்ட 120 ஆண்டு பழமையான பள்ளிக் கட்டடம்

மலரும் நினைவுகளுடன் குவிந்த முன்னாள் மாணவர்கள்

தரங்கம்பாடி, பிப்.25- நாகை மாவட்டம் மயிலாடுதுறை மகா தானத்தெருவில் பழைமை வாய்ந்த டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி எனப்படும் திவான் பகதூர் தி.அரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 1900-ஆம் ஆண்டு கோமல் சீனிவாசராகவ ஐயங் கார் என்பரால், திண்ணைப் பள்ளியாக துவக்கப்பட்டு, பின்னர் சிறிய கட்டடத்தில் 1902-ஆம் ஆண்டு முறைப்படி பள்ளி துவங்கப்பட்டது. தொடர்ந்து, 1949-ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 1954-ஆம் ஆண்டு பிரமாண்ட மாடிக் கட்டடத்தில் பள்ளி இயங்கியது. மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதி களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் இந்த பள்ளி கடந்த 120 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த பலர், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உயர் பதவியில் உள்ளனர். இந்நிலையில், முன்னாள் மாணவர்களின் நிதி உதவியுடன், பழைய பள்ளிக்கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டடம் கட்டப்பட உள்ளது. 

இதற்காக பள்ளிக்கட்டடம் இடிக்கும் பணி திங்கள்கிழமை முதல் துவங்கும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்து அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியை சுற்றிப் பார்க்க இரண்டு நாட்களுக்கு பள்ளி நிர்வாகம் அனுமதியும் அளித்திருந்தது. இந்த தகவல் முகநூல், கட்செவி உள்ளிட்ட சமூக ஊட கங்கள் மூலம் முன்னாள் மாணவர்களிடையே வேகமாக பரவியது. தகவலறிந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தமிழகம் மட்டுமன்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பள்ளிக்கு வந்திருந்து, தாங்கள் பயின்ற வகுப்பறைகளில் அமர்ந்தும், குழுப் புகைப்படம் எடுத்தும் மலரும் நினைவுகளில் ஆழ்ந்தனர்.  ஒரு சில மாணவர்கள் தனியே வந்தமர்ந்து கண்ணீர் சிந்த தங்கள் பழைய நினைவுகளை அசைபோட்டனர். தங்கள் பள்ளிக்கட்டடம் இடிக்கப்படுவது ஒருபுறம் வருத்தமாக இருந் தாலும், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப புதிய கட்டடம் கட்டப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.