இந்தியாவில், வெங்காயத்தின் விலை அதிகரித்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது. இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, சில்லறை விற்பனையில், வெங்காயம் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது உருளைக்கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது.
உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களான பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. இதனால் உருளை கிழங்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன. விளைச்சல் குறைந்துள்ளதால் உருளை கிழங்கு விளையும் உயர்ந்துள்ளது. தில்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த மாதம் இந்த மாநிலங்களில் உருளை கிழங்கு விலை 12 ரூபாய் என்ற அளவில் இருந்தது. போதிய உருளை கிழங்கு வராததால் இந்த விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.