பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19அன்று நடைபெற உள்ளது. காங்கிரஸ்கட்சியின் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின்ஆதரவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் போட்டியிட இருக்கிறார்.
இதனிடையே பாஜக சார்பில் 2 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலையில், வேட்பாளர்களை அக்கட்சி அறிவிக்காமல் இருந்து வந்தது.முதல்வர் எடியூரப்பா 4 வேட்பாளர் களின் பெயரை சிபாரிசு செய்து தில்லிமேலிடத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால், எடியூரப்பா அனுப்பி வைத்திருந்த 4 பேரையும் பாஜக தலைமை புறக்கணித்துள்ளது. கர்நாடகத்தில் பெரிய அளவிற்கு அறிமுகம் இல்லாத எரன்னா கடாடி, ராய்ச்சூர் அசோக் காஸ்டி ஆகியோரை மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இது முதல்வர் எடியூரப்பாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கர்நாடகத்தில் எடியூரப்பாவுக்கு எதிராக, பாஜக எம்எல்ஏ-க்கள் பலர் கலகம்செய்துவருகின்றனர். ஜகதீஷ் ஷெட்டர்போன்ற தலைவர்களில் எவர் ஒருவரையும் முதல்வராக நியமியுங்கள்; எடியூரப்பா மட்டும் நீடிக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கையாக உள் ளது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் விவகாரத்தில், பாஜகவின் தில்லி தலைமையும் எடியூரப்பாவை புறக்கணித்துள்ளது. இதன்மூலம் எடியூரப்பாவின் முதல்வர் பதவியும் விரைவிலேயே பறிக்கப்படலாம் என்று கர்நாடக பாஜகவட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.