பெங்களூரு:
இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப் பேர் வைரசால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அறியாமல் வாழ்வர்என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூர் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் நரம்பியல் ஆய்வுத் தலைவர் மருத்துவர் ரவி கூறியிருப்பதாவது:-
நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பை காணவில்லை. மே 31 அன்று ஊரடங்கு முடிவடைந்த பின்னர் ஜூன்முதல் பாதிப்பு அதிகரிக்கும். சமூகப் பரவல் அதிகரிக்கும்.டிசம்பர் இறுதிக்குள், இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால்ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவர்களில் 90 சதவீதம்பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது கூட அறியாமல் வாழ்வர் என அவர் கூறியுள்ளார்.