அசாதாரண சூழ்நிலையில் எச்சரிக்கை தேவை
கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
திருவனந்தபுரம், மார்ச் 19- கோவிட் 19 (கொரோனா வைரஸ்) பரவுவதை தொடர்ந்துள்ள சூழ்நிலை அசாதாரணமானது எனவும், சிறு தவறுகூட நிலைமையை மோசமாக்கி விடக்கூடும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்தார். கோவிட் 19 தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதி களுடன் காணொலி காட்சி மூலம் வியாழ னன்று முதல்வர் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, அமைச்சர் ஏ.சி.மொய்தீன் ஆகியோர் முதல்வருடன் பங்கேற்றனர். காணொலி காட்சியில் முதல்வர் பேசியதாவது:
சிறு தவறுகூட இப்போதுள்ள நிலை மையை மோசமாக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தலையிட வேண்டும். உணவுப் பொருட் கள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும். அலுவலகங்கள், பொது இடங்கள், பேருந்து நிலையம், சந்தை போன்ற இடங்கள் சிறப்பான முறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும். திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்க லின்போது செயல்பட்டதுபோல் மற்ற இடங்களிலும் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
தனிமைப்படுத்தல் அல்ல, பராமரிப்பு
வீடுகளில் கண்காணிப்பில் உள்ள வர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உணர்த்த வேண்டாம். அதனால்தான் தனிமைப் படுத்தப்பட்டது (கோரண்டைன்) என்கிற வார்த்தைக்குப் பதில் பராமரிப்பு இல்லம் (கேர் ஹோம்) என்கிற வார்த்தை யை பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. திருமணங்களும் பொது நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இத்தகைய எச்சரிக்கை தொடர வேண்டும். மருந்துகள், தடுப்பு உபகரணங்கள் கிடைப்பது போன்ற வற்றில் உள்ளாட்சி அமைப்புகளின் கவனம் தேவை. பதுக்கல் போன்ற தீமைகளைத் தடுக்க வேண்டும். கேரளத்தில் உள்ள வெளிமாநில தொழி லாளர்கள் பலர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்கள் கூட்டமாக வர வாய்ப்புள்ளது. நோய் பரவாமல் தடுக்க அவர்களுக்கு விழிப்பூட்டுவது முக்கியம். இதில் உள்ளாட்சி அமைப்புகள் முன்னணியில் இருக்க வேண்டும்.
இந்தியாவில் மொத்தம் உள்ள 6,50,000 மருத்துவமனைகளில் ஒரு லட்சம் மருத்துவமனைகள் கேரளத்தில் உள்ளன. எனவே, முதியோர்கள் குறித்து கூடுதல் கவனம் தேவை. வலி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர்கள் இதில் பெரிய பங்கு வகிக்க முடியும். கடலோர குடி யிருப்பாளர்கள், வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், வெளி மாநில தொழி லாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவர்கள். எஸ்சி / எஸ்டி மக்களிடம் வலுவாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரையும் தனிமைப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. சில சம்பவங்கள் நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. தலையீடுகள் அச்சுறுத்தலாகி விடக்கூடாது. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்கிற சூழ்நிலை உள்ளது. அவர்களும் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.