ஆப்கானிஸ்தானில் ரமலான் தொழுகையின் போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 செய்தியாளர்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை.
இதேபோல் கடந்த மாதம் பக்லான் மாகாணத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்தின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.