tamilnadu

img

கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு ரூ 10லட்சம் பரிசு அறிவிப்பு

தோஹா ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு ரூ. 10லட்சம் அறிவித்துள்ளது. 

தோஹா ஆசிய தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து(30), 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். ஏற்கெனவே, தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இவர், 2.02.70 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தமிழக அரசு கோமதி மாரிமுத்துவுக்குக் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. மேலும் வெற்றி வென்ற ஆரோக்ய ராஜ்க்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.