அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி நந்தினி வன்கொடுமையினால் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து பல கட்ட போராட்டம் நடத்தின. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைக்கப்பட்டன. இந்நிலையில் நந்தினியின் சகோதரர் ரஞ்சித்குமாருக்கு அரசு வேலைக்கான அரசாணையை தமிழக அரசு வழங்கியது.
அந்த ஆணையின்படி, அரியலூர் தீண்டாமை ஒழிப்பு தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக நந்தினியின் சகோதரர் பணியில் சேர்ந்தார். இந்நிகழ்வில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையினை ஏற்று நந்தினியின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசுக்கு மாவட்டச் செயலாளர் ஆ.மணிவேல் நன்றி தெரிவித்தார்.