tamilnadu

முகக் கவசம்  அணியாதவர்களுக்கு அபராதம்

ஜெயங்கொண்டம், ஜூன்  23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாய விளைபொருட்களான எள் மற்றும் மணிலா போன்ற பொருட்களை கொண்டுவரும் விவசாயிகள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முக கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர் .  இதனையடுத்து சமூக ஆர்வலர் ஒருவரால் நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பின்னர் முக கவசம் அணியாமல் இருந்த விவசாயிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.