tamilnadu

img

‘டிரம்ப் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்!’

நியூயார்க்:
காஷ்மீர் விவகாரத்தில், பிரதமர் மோடி மத்தியஸ்தம் கேட்டது உண்மைதான் என்று அமெரிக்க ஜனாதிபதியின்ஆலோசகர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.இரண்டு நாட்களுக்கு முன்பு,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந் திப்பிற்குப் பின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், செய்தியாளர்களுக்கு பேட்டிஒன்றை அளித்திருந்தார்.

அதில், “ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடியும் நானும் சந்தித்துப் பேசினோம். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருந்து பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்களா? என்று மோடி என்னிடம் கேட்டார். நான்மத்தியஸ்தராக இருந்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமெனவும் அவர் விரும்பினார்” என்று கூறினார். இது இந்திய எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது என்பதுதான் இந்தியாவின் நீண்டநாள் கொள்கையாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, பிரதமர் மோடி எதன்அடிப்படையில், டிரம்ப்பை மத்தியஸ்தம்செய்ய அழைத்தார்? என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. 

ஆனால், “காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி கோரிக்கை எதுவும் வைக்கவில்லை” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரேயடியாக மறுத்தார். “இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளைத் தீர்க்க சிம்லா ஒப்பந்தமும், லாகூர் ஒப்பந்தமுமே அடித்தளமாக இருக்கும்” என்றும் கூறினார்.ஆனால், அதனை ஏற்றுக்கொள் ளாத எதிர்க்கட்சிகள், “பிரதமர் மோடி நேரடியாக நாடாளுமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன.இந்நிலையில், “காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு மோடிஉதவி கேட்டது உண்மைதான்” என்றும்“டிரம்ப் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்” என்றும் டிரம்ப்பின் ஆலோசகர்லாரி குட்லோவ் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதி வாயில் வந்ததை எல்லாம் அப்படியே பேசமாட்டார்; அவர் சொன்னது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை. இதில் அவர்பொய் சொல்ல என்ன இருக்கிறது? அவர்நடந்த விஷயத்தைதான் பேசி இருக்கி
றார். தானாக எதையும் அவர் உருவாக்கி பேசவில்லை; டிரம்ப் பேச்சு குறித்து இப்படி எழுப்பப்படும் கேள்விகளே அடிப்படையில் தவறானது; இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றும் லாரி குட்லோவ் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.