போபால்:
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008 செப்டம்பரில் மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து,6 பேர் இறந்தனர். 100-க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவத்தில்கைதான 11 பேர்களில் ஒருவர்தான்,பெண் சாமியார் பிரக்யா சிங்.9 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமீனில்வெளியே இருக்கிறார். போபால்தொகுதி பாஜக எம்.பி.யாகவும்உள்ளார். மோசடி வேலைகளுக்கும், பொய் பேச்சுக்கும் பேர் போனவர். கோட்சேவை “தேசபக்தர்” என்றவரும் இவர்தான்.
“சிறையில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது கோமியத்தைக் குடித்து குணமானேன்” என்று பிரக்யா ஒருமுறை கூறினார். ஆனால், “பிரக்யாவுக்கு புற்றுநோயா? யார் கூறியது?” என்று கேட்டுசிறை மருத்துவர் உண்மையை போட்டு உடைத்தார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பிக்க, தன்னால் நடக்க முடியவில்லை என்று இப் போதுவரை வீல் சேரிலேயே பிரக்யாசிங் ஊரைச் சுற்றி வருகிறார். ஆனால், அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பிரக்யா சிங் நடனமாடிய வீடியோ, நாட்டையே கலங்கடித்தது. அவர் ஆடிய கூடைப்பந்துவீடியோவும் சமூகவலைதளங்களில் பிரபலமானது.
இப்படிப்பட்டவர்தான், தற் போது போபாலில் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இன்னும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. காங்கிரஸ்தான் இதில் பொய்யான பிரச்சாரம் செய்கிறது” என்று கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.“எம்.பி. மேடம் காமெடி எதுவும்செய்யவில்லையே, நீங்கள் இந்தியாவில்தான் இருக்கிறீர்களா...?” என்றும், “நல்லவேளை பெட்ரோலுக்குப் பதில் கோமியத்தை பயன்படுத்துங்கள்; பெட்ரோல் விலைபற்றி பேசுபவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்லாமல் விட்டீர்களே..?” என பலரும்சமூக வலைதளங்களில் கருத்துக் களைப் பதிவிட்டு வருகின்றனர். “முன்பு 70 ரூபாய்க்கு விற்றபெட்ரோல் இப்போது 100 ரூபாய்க்குவிற்கிறது. இது அதிகம் என்று நான்சொல்கிறேன். பிரக்யா சிங் தாக்கூரோ குறைவு என்கிறார். அப்படியானால் நான்தான் கணக்கில் பலவீனமாக இருக்கிறேனோ?” என்றும் ஒருவர் தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டுள்ளார்.