india

img

பொய், பித்தலாட்டத்திற்குப் பெயர்போன வேளாண் அமைச்சர்.... மோடி அரசின் அமைச்சரவை விரிவாக்க லட்சணம்....

புதுதில்லி;
அமைச்சர் பதவி வழங்கப்பட்ட 11 பெண்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஷோபா கரந்தலாஜே-வும் ஒருவர். சங்-பரிவாரங்களுக்கே உரிய வகையில், பொய்- பித்தலாட்டங்களுக்குப் பெயர்போனவர்.2017-ஆம் ஆண்டில், ‘ஜிஹாதிகள்’ 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துகொலை செய்ய முயன்றனர் என்று ஒரு இட்டுக்கட்டிய கதையை அவிழ்த்து விட்டார். அது பொய் என்று தெரியவந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஹொன்னவர் போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இரு சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பி மாட்டிக் கொண்டார்.

ஆனால், ஷோபா கரந்தலாஜே திருந்தவில்லை. கேரளாவின் மலப்புரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரித்ததற்காக அங்குள்ள இந்துக் குடும்பங்கள் ஊர்விலக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்கள்குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் மற்றொரு குற்றச்சாட்டைக் கிளப்பினார். ஆனால், அதுவும் பொய் என்பது பின்னர் அம்பலமானது. இந்தமுறை கேரள போலீசாரும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.கடைசியாக, 2021 மே மாதம், “கிறிஸ்தவர்கள் தடுப்பூசிகளுக்கு எதிரானவர்கள்” என்றும் ஒரு அவதூறை ஷோபா கரந்தலாஜே பரப்பி மாட்டிக் கொண்டார். இதுதொடர்பாக கர்நாடகாவின் மங்களூரு பாண்டேஸ்வர் போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட பொய்- பித்தலாட்ட பேர்வழிகளைத்தான், புதிய முகங்களுக்கு வாய்ப்பு என்ற பெயரில் மோடி அவர்களை ஒன்றிய அமைச்சராக்கியுள்ளார்.