tamilnadu

img

டிரம்ப் மீது பெண் பத்திரிக்கையாளர் பாலியல் குற்றச்சாட்டு

பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது கட்டுரையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

நியூயார்க்கை சேர்ந்த பத்திரிகையாளரான இ ஜீன் கர்ரோல் (75), நியூயார்க் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், 1993-ஆம் ஆண்டு டிபார்மென்ட் ஸ்டோர் ஒன்றின் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் பற்றிய இது போன்ற பல விஷயங்களை விரைவில் தான் வெளியிட உள்ள "ஹைடியஸ் மென்” (hideous men) என்ற புத்தகத்தில் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த விவகாரத்தில் தான் அமைதியாக இருந்தது தனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், இந்த பெண்ணை தனது வாழ்நாளில் கண்டதே இல்லை எனவும், இந்த குற்றச்சாட்டு தவறானது என்றும், ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, 12க்கும் மேற்பட்ட பெண்கள் அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போதும் டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளையும், பொய் என்று கூறி அதனை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.