இந்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. அதில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கும், செனட்சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. சமீபத்தில், அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பெர்னி சான்டர்ஸ் விலகினார். இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜோ பிடன் அதிக வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 1,991 பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.