அகமதாபாத்:
பிரதமர் மோடி, அவரை வளர்த்துக் கொள்ள மகாத்மா காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாக வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா விமர்சித்துள்ளார்.மகாத்மா காந்தியின் நினைவு தினத்தைமுன்னிட்டு அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராமச்சந்திர குஹா பேசியுள்ளார்.
அதில், “மோடி 2014-இல் பிரதமராவதற்கு முன்பாக காந்தியை நேசித்தாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள குஹா, “தன்னைவளர்த்துக்கொள்வதற்காக மகாத்மா காந்தியின் பெயரை மோடி துஷ்பிரயோகம் செய்தார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.“மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம் எதிர்த்திருப்பார்; ஆனால் பிரதமர் மோடியோ, காந்தியை தவறாக மேற்கோள் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்.அரசும், நீதித்துறையும் அகிம்சை வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்; ஆனால், இந்தியாவின் இரண்டு முக்கியமானவர்களின் (மோடி, அமித்ஷா) பேச்சிலும் வன்முறையே தொனிக்கிறது. ஷாகீன்பாக் போராட்டப் பெண்களைப் பற்றிய, நம்உள்துறை அமைச்சரின் கருத்து மோசமானது; எந்தவொரு நாகரிகமான ஜனநாயகநாட்டிலும் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்; உள்துறை அமைச்சரே இப்படிப் பேசுவதால் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் அதை விடவும் மோசமாகப் பேசிவருகின்றனர்” என்றும் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.