அகமதாபாத்:
பிரதமர் மோடி தேநீர் விற்கபயன்படுத்திய ஸ்டாலை, ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றகுஜராத் மாநில பாஜக அரசுமுடிவு செய்துள்ளது.“எனது இளமைக் காலத்தில் குஜராத்தில் உள்ள வாட் நகர் ரயில் நிலையத்தில் தேநீர்விற்றேன்” என்று பிரதமர் நரேந் திர மோடி, அவ்வப்போது பெருமைபொங்க கூறிக் கொள்வது உண்டு. எனினும்,மோடியின் பட்டப்படிப்பு போல, அவர் ‘டீ’ விற்றார்என்ற செய்தியும் சந்தேகத்திற்கு உரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.இந்நிலையில்தான், மோடி டீ விற்றதாக கூறப்படும் கடை இருந்த இடத்தை, ஒரு சுற்றுலாத்தலமாகவே மாற்றிவிட, குஜராத் மாநிலபாஜக அரசு முடிவு செய் துள்ளது. வாட் நகர் ரயில் நிலையத்தின் ஒருங்கிணைந்த சாராம்சத்தையோ அல்லதுதோற்றத்தையோ மாற்றாமல், டீ விற்ற ஸ்டாலை மட்டும்ஒரு சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதே திட்டம் என்றுமாநில சுற்றுலா அமைச்சர்பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மோடி டீ விற்ற ஸ்டாலைஆய்வு செய்துவிட்டபிரகலாத், அந்த ஸ்டாலை கண் ணாடியால் மூடி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.