அந்தமான் தீவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அந்தமான் தீவுபகுதியில் இன்று காலை 7.24 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 என பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அந்தமானில் கடைசியாக ஏப்ரல் 1-ம் தேதி 4.7 ரிக்டர் முதல் 5.2 ரிக்டர் வரையில் 9 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.