செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

img

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை

செங்கல்பட்டு, டிச.31- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்குப் பணி வழங்கிட வலி யுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திற னாளிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற் குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளி களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கிட வலியுறுத்தியும், கூலி ரூ. 229 வழங்க வேண்டும், 4 மணி நேரம் பணி செய்தால் முழு கூலியை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நலச் சங்கத்தின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் ப.பாரதிஅண்ணா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் அரி கிருஷ்ணன், சிபிஎம் திருப்போரூர் வட்டச் செயலா ளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பேத்கர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்த னர்.

;