வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் புருஷோத்தமன், அமைப்புச் செயலாளர் பி.ஆர்.சுப்பிரமணி, பொதுச்செயலாளர் சுரேஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டையை வழங்கினர். மாவட்டத் தலைவராக இந்திரகுமார், செயலாளராக கல்யாணசுந்தரம், பொருளாளராக வி.சி.ரகு தேர்வு செய்யப்பட்டனர்.