வேலூர், ஜூலை 6- பழங்குடியின மலைவாழ் மக்களின் நிறை குறை களை கண்டறிந்து சரி செய்வதற்காக, தேசிய அளவில் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என தேசிய பழங் குடியினர் ஆணையக்குழு தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் வெங்கடாபுரம் பகுதியில், பழங்குடியினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியின் கீழ் 31 லட்சம் மதிப்பீட்டில் 14 தொகுப்பு வீடுகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இப்பணி கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய பழங்குடி யினர் நல ஆணையக்குழு தலைவர் நந்தகுமார் சாய் தலைமையில், துணைத் தலைவர் அனுசுயா யுகி மற்றும் உறுப்பினர்கள் கீழ்வெங்கடாபுரம் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை பார்வையிட்டனர். மேலும், வீட் டின் உரிமையாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? எனக் கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் சாதிச் சான்றிதழ், சமையல் எரிவாயு இணைப்பு, வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தருதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் வசதி களை செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். பின்னர் நந்தகுமார் சாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், `நாடுமுழுவதும் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை, விரை வில் மீட்டு மீண்டும் பழங்குடியினர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆட்சியர் சண்முக சுந்தரம், கோட்டாட்சியர் பார்த்திபன், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் பெரியசாமி, வட்டாட்சியர் ஜெயக் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சுரேஷ் சவுந்திரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.