திருவில்லிபுத்தூர், டிச.29- திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் கல்வி மற்றும் சமுதாய மாற்றத்திற்கான டெஸ்ட் அறக்கட்டளைஇராஜபாளையம் கிராமப்புறங்களிலுள்ள உள்ள இளம் தொழிலாளர்கள் 4,000-க்கும் மேற்பட்டோரை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இனைத்து விட்டுள்ளது. பஞ்சாலையில் பணிபுரியும் இளம் பெண் தொழிலாளர்களை நிர்வாக த்தின் உதவியோடு பிரதமரின் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்ன முயற்சியில் இறங்கியுள்ளது. இதனொருபகுதியாக இராஜபாளையம் பாலிஸ்பின் எக்ஸ்போர்ட் மற்றும் ஸ்பின்னிங் மில்லில் பணிபுரியும் இளம் பெண் தொழிலாளர்களுக்கு டெஸ்ட் களப்பணியாளர் சத்யா காப்பீட்டுத் திட்டம் குறித்து எடுத்துரைத்து அவர்களை திட்டத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டார்.