tamilnadu

img

இளையோருக்கான கலைப் போட்டிகள்

விழுப்புரம்.டிச.31- தேசிய இளையோர் விழாவையொட்டி, விழுப்பு ரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நேரு இளை யோர் மையம் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம் ஆகியவை சார்பில், மாவட்ட அளவிலான  கலைப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட இளை யோர் ஒருங்கிணைப்பாளார் ராம்சந்திரன் தலைமை  தாங்கினார். முன்னதாக நேரு இளையோர் மையக் கணக்கா ளார் கணேசன் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் கலந்து கொண்டு போட்டி களைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.  இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாலு செல்வராஜ் வாழ்த்திப் பேசி னார். கிராமிய நடனம், பாராம்பரிய நடனம், இசைப்  போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன. போட்டிகளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட  இளைஞர்கள், இளம் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற வர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப் பட்டன. முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் அடுத்த  கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டி களில் பங்கேற்கவுள்ளனர்.