tamilnadu

img

அம்பேத்கர் ஆட்டோ சங்க நிர்வாகிகள்

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கூட்ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிஐடியு தலைவர் எஸ்.முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்காலத்தில் சங்கத்தின் செயல்பாடு, வளர்ச்சி குறித்து பேசினர், பின்னர் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ சங்கத்திற்கு எஸ்.முருகன் தலைவராகவும், செல்வம் செயலாளராகவும், ஸ்ரீதர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

;