tamilnadu

img

மின்சாரம் இல்லா குடிசை மக்கள்...

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொல்லக் காலனி பகுதி மக்கள் தங்களின் குடிசைகளுக்கு மின்சார வசதி கேட்டு கடந்த 15 ஆண்டுகாலமாக போராடி வருகிறார்கள்.  இதுவரைக்கும் அதிகாரிகளால் அந்த கிராமத்திற்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்படவில்லை. குடிதண்ணீர் வழங்கும் மோட்டா ருக்கும் மின்சார இணைப்பு இல்லை என்பதால் அரசு உரிய நட வடிக்கை எடுக்குமா? என்று திமுக உறுப்பினர் வி.ஜி.ராஜேந்தி ரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, “உறுப்பினர் குறிப்பிடும் இடம் ஓடை அல்லது ஆட்சேபகரமான புறம்போக்கு இடமாக இருக்கலாம். அந்த இடத்திற்கு மின் இணைப்பு வழங்க வட்டாட்சியர் தடையில்லா(என்ஓசி) சான்று வழங்கினாலே போதும். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.