tamilnadu

img

இந்தியாவில் இப்போதும் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் இல்லை... கொரோனா பரவலை லாபமாக பார்க்கிறது கார்ப்பரேட் மருத்துவம்

மும்பை:
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், பொது சுகாதாரத்திற்கு இப்போதும் முக்கியத்துவம்  இல்லை  என்று விஞ்ஞானி  டி.  ஜெயராமன்  கூறியுள்ளார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள  கட்டுரையில் கூறியுள்ளதாவது:

தற்போதைய கொரோனா தொற்றுநோயின் பின்னணியில், உலகில் எல்லா இடங்களிலும், பொது சுகாதாரம் ஒரு முக்கியமான கோரிக்கையாக மாறியுள்ளது. ஆனால், இந்தியாவின் பொதுசுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கான கோரிக்கைகள் சில அறிவுஜீவி களைத் தவிர எளிய பொதுமக்களால் முன்வை க்கப்படவில்லை என்பது அசாதாரணமானது. 

பொது சுகாதார கோரிக்கை   ஏன் இந்தியாவில் இன்னும் அதிக முக்கியத்துவம்பெற வில்லை என்பதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, இந்தியாவில் பெரும்பகுதியாக இருக்கும் உழைக்கும் மக்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்கே பெரும்பாடுபட வேண்டிய நிலையில் இருக்கும்போது அவர்களின்  முன்னுரிமையிலிருந்து இந்த கோரிக்கை விலகி நிற்கிறது.   இரண்டாவதாக அவர்கள் பொது சுகாதாரம் இல்லாமலே வாழப் பழக்கப்பட்டி ருக்கிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், அவர்கள் அதை எதிர்பார்க்கக்கூட இல்லைஎன்ற நிலைக்கு வந்துவிட்டனர். மூன்றாவதாக, கோவிட்டுக்கு முந்தைய நாட்களிலேயே கூட,ஏழைகள் பொது சுகாதாரத்தினை தவிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஏனெ னில் அவை அந்த அளவிற்குதான்பராமரிக்கப்பட்டு இயங்கி வரு கின்றன.

கேரளா மாடல் குறித்து ஒரு சில அரசியல்  வட்டாரங்களையும், சிலமீடியாக்களையும் தவிர்த்து  பொது  மக்களிடம்வரவேற்பு இல்லை.  கேரளாவே கூட, ஏற்கெனவே நிலவி வரும் சூழலில் கணிசமாக தனியார் மருத்துவத்துறையை நம்பியிருக்க வேண்டிய நிலைதான்  உள்ளது.  கோவிட் -19 பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை, நாட்டில் பொது சுகாதாரத்தின் தோல்விக்கு முதன்மை எடுத்துக் காட்டாக உள்ளது.அதேபோல, தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு திட்டங்களில் போதிய கவனம் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்பதும் பெரியஅளவிற்கு மக்களுடைய கவனத்தை ஈர்க்கவில்லை.

தொற்று பரவினால் ‘லாபம்’
கார்ப்பரேட் மருத்துவம் இந்ததொற்று நோயை இலாபங் களுக்கான வாய்ப்பாகக் காண்கிறது. ஊரடங்கு தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு,கோவிட் -19 சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மட்டும் ஒரு நாளை க்கு 5000 ரூபாய்  தொடங்கி வெண்டிலேட்டர்  பயன்பாட்டுடன் ஒரு நாளைக்கு ரூ.9000வரை வசூலிக்கப்படு கின்றன. நடுத்தர வர்க்க நோயாளிகளுக்கே கூட இந்த  செலவினை தாங்க முடியாது எனும் போது ஏழைகளைப் பற்றி பேசுவதற்கில்லை. பொதுப் பயன்பாட்டிற்கு படுக்கைகளை கிடைக்கச் செய்ய வேண்டும்என்று வற்புறுத்துவதை விடுத்து தனியார் துறையை, ஒத்துழைப்புக்காக வற்புறுத்துவதில் தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.ஆனால், தற்போது நிலைமை ஒரு தீவிர நெருக்கடியை எட்டியிருந்தாலும் கூட, பொது சுகாதாரத்தின் தேவையை ஆட்சியாளர்கள் வலுவாக வெளிப்படுத்தாதது, இந்தியாவில் மிகப்பெரிய குறைபாடாகும்.

உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பொது சுகாதாரத்தை அலட்சியம் செய்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதனை மக்களும் ஊடகங்களும் புரிந்து கொண்டு, பொது அலசலுக்குட்படுத்தியுள்ளனர்.  பொது சுகாதார முறையின் இன்றியமையாத பங்கை ஒப்புக்கொண்டுள்ளனர்.தனியார் சுகாதார சேவையின் நற்பண்புகளை புகழ்ந்து தள்ளிய பிரதான பொருளாதார வல்லுநர்களும் பொதுக் கொள்கை வல்லுநர்களும் பல வருடங்கள் கழித்து, பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். அந்த நாடுகளிளெல்லாம் சுகாதாரப் பாதுகாப்பை தனியார்மயமாக்குதல் என்ற கருத்துக்கு ஒரு திட்டவட்டமான எதிர்ப்பலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சோகம் என்னவென்றால், அத்தகைய சிறு சலசலப்பு கூட உண்மையில் இந்தியாவில் காணப்படவில்லை. பொது சுகாதாரத்திற்கு உலகளாவிய முக்கியத்துவம் எழுந்துள்ள நிலையில்,  பொது சுகாதாரத்திற்கான செலவினங் களின் அதிகரிப்புக்காக போராடுவது என்பது நாட்டின் அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கான அரசியல் சக்திகளுக்கும் முன் முக்கியமான ஒரு கடமையாக எழுந்துள்ளது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழில் சுருக்கம் : ஆர்.எஸ்.செண்பகம்
 

;