tamilnadu

img

மகாராஷ்டிராவை சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர் தற்கொலை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தை சேர்ந்த ஊழியர் சைலேஷ் சிங் என்பவர், 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 22,000 பேர் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்தில் உள்ள நளசோபரா கிழக்கு பகுதியை சேர்ந்த சைலேஷ் சிங் (வயது 53) கடந்த 3 ஆண்டுகளாகவே கடும் வயிற்று புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையிலிருந்து கடந்த வெள்ளிக் கிழமை அன்று வீடு திரும்பிய அவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல மாதங்களாக சம்பளம் வராததால் மருத்துவ செலவையும் செய்ய முடியாமல், கடனையும் கட்ட முடியாமல் தவித்து வந்த அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்துள்ளது.