tamilnadu

img

வெண்கடலானது கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி, செப்.11-  கள்ளக்குறிச்சியை பேரணியால் வெண்கட லாக்கி வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு செப் டம்பர் 11 ஞாயிறன்று எழுச்சியுடன் துவங்கியது.  இளைஞர்களின் போராட்டக்குரலாக செயல்பட்டு வருகின்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு  கள்ளக்குறிச்சி யில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் ஞாயிறன்று துவங்கியது. வாலிபர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 11, 12,13 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சியில் தோழர்கள் கே.சி.கருணா கரன், என். நன்மாறன் நினைவுத் திடலில் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார் தலைமையில் நடை பெறுகிறது.  முதல் நாளான ஞாயிறன்று ஏ.எம்.சி  மருத்துவமனை அருகில் இருந்து இளைஞர் களின் லட்சியப் பேரணியுடன் எழுச்சிகரமாக மாநாடு துவங்கியது. 

17ஆவது மாநாட்டை குறிக்கும் வகையில் 17 வெண்கொடிகளுடன் தொண்டர்கள் அணி வகுக்க சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும், அனை வருக்கும் இலவச கல்வி-வேலை கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தியும் விண்ணதிர முழக்கமிட்டு சென்றனர். இது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மாவட்ட வாரியாக அணி அணியாக வெண் கொடிகளுடன்   வெண்படை இளைஞர்கள் மேளம்  தாளம் முழங்க அணிவகுத்துச் சென்றனர். பேரணி துவங்கி பொதுக்கூட்டம் நடைபெற்ற மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு எங்கு பார்த்தா லும் வெண்கொடி ஏந்திய இளைஞர் பட்டாளத் தால் கள்ளக்குறிச்சி நகரம் வெண்கடலாகவே காட்சியளித்தது.

இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹிம் எம்.பி, அகில இந்திய பொதுச் செய லாளர் ஹிமக்னராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலப் பொருளாளர் தீபா, மாநில துணைச் செயலாளர்கள் சி.பாலச்சந்திரபோஸ், ஏ.வி.சிங்காரவேலன், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.கார்த்தீஸ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். முன்னதாக  நடைபெற்ற புதுகை பூபாளம், காம்ரேட் டாக்கீஸ், புதுவை சப்தர் ஹஸ்மி கலைக் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏழுமலை வர வேற்றார். மாவட்டச் செயளாளர் எம்.கே.பழனி நன்றி கூறினார். செப்டம்பர் 12 இன்று 2ஆவது நாள் பிரதிநிதி கள் மாநாடு நடைபெறுகிறது. இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், மின் ஊழி யர் மத்திய அமைப்பு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், மாதர் சங்கம், தமுஎகச, சிஐடியு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

;