tamilnadu

img

போலீசாரின் வாக்குப்பதிவில் தில்லு முல்லு செய்ய முயற்சியா? மேலூர் பொதுக்கூட்டத்தில் இரா.முத்தரசன் கேள்வி

மதுரை, ஏப். 7-

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் சு.வெங்கடேசனை ஆதரித்து வெள்ளியன்று மேலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிபிஐ மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:-யாரை வீழ்த்த வேண்டுமென்பதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ கத்திற்கு அனைத்து வகையிலும் துரோகம், வஞ்சகம் செய்த பாஜக அரசையும் அதற்கு துணைபோன அதிமுக அரசையும் வாக்காளர்கள் வீழ்த்த வேண்டும். அதிமுக-பாஜக-விடம் பணம்மட்டுமே உள்ளது. நாங்கள் நேர்மை யாளர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள்.தமிழகத்தில் 35 ஆயிரம் போராட்ட ங்கள் நடைபெற்றுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே ஒப்புக்கொண்டு ள்ளார். அப்படியென்றால் தமிழகத்தில் அந்தளவிற்கு பிரச்சனைகள் அதி கரித்துள்ளது என்பது தெளிவாகிறது.தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையும், அதன் செயல்பாடும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள்தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது வெற்றுதபால்வாக்குப் படிவங்களில் காவலர்களிடம் கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உயரதிகாரிகள் தாமே அனைத்துப் படிவங்களிலும் டிக் செய்து வாக்களித்து மொத்தமாக வாக்குப்பெட்டியில் சேர்த்தார்கள். இப்போதும் அதே முறையைக் கடைப் பிடிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளன. இது குறித்துதேர்தல் ஆணையத்திடம் புகாரளிக் கப்பட்டுள்ளது.


காவல்துறையினரின் வாக்குப் பதிவில் தில்லு முல்லு செய்ய முயற்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறையினர் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பதை ஆணையம் உறுதி செய்யவேண்டும்.பாஜக தமிழக அரசை மிரட்டிப் பணியவைத்து மக்களவைத் தேர்தலில் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளது. தமிழகஉரிமைகள் பறிபோனாலும் பரவா யில்லை. முதல்வர் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருந்தால் போதுமென நினைக் கிறார் எடப்பாடி. காவல்துறையில் “ஏட்டாக” இருப்பவர் “இன்ஸ்பெக்டர்” ஆகலாம். ஆனால் தமிழகத்தில் “இன்ஸ்பெக்டர்” ஆக இருந்த பன்னீர்செல்வம் (முதல்வர்) இருப்பவர் “ஏட்டாக” (துணைமுதல்வர்) கீழிறக்கப் பட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கும் பதவிஆசை தான். அவரும் நாற்காலியை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளார்.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக பிரச்சாரக் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார். பொள்ளாச்சி சம்பவம் அவ மானகரமானது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தமிழக அரசு பாது காத்துவருகிறது.தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது அதன் பாதிப்புகளை அறியமோடி தமிழகத்திற்கு வரவில்லை. தமிழகம் கேட்ட 15 ஆயிரம் கோடி நிதியையும் தரவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால்தான் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தமுடியும் எனக் கூறும் எடப்பாடியால் ஏன் புயல் நிவாரண நிதியைப் பெறமுடியவில்லை.எடப்பாடி அரசுக்கு மோடி முட்டுக்கொடுத்து வருகிறார். மே 23-ஆம்தேதிக்குப்பின்னர் மோடி, எடப்பாடிஇருவரும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.


மதுரைக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை பெருவாரியான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.இவ்வாறு இரா.முத்தரசன் பேசினார்.இந்தக் கூட்டத்திற்கு சிபிஐ தாலுகா செயலாளர் மெய்யர் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பி.சேதுராமன், மாவட்டச் செயலா ளர் பா.காளிதாஸ், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மார்நாடு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் அலங்கை செல்வ அரசு, அய்யாவு, அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் சிவ.கலைமணி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அப்துல்ரஹ்மான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆகியோர் பேசினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.சின்னதுரை, டி.ரவீந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;