இன்றைய ஆட்டங்கள்
இலங்கை - விண்டீஸ்
இடம் : செஸ்டர் லே ஸ்ட்ரீட்
நேரம் : பிற்பகல் 3 மணி
வெற்றி 50% - 50% வாய்ப்பு
இரு அணிகளை ஒப்பிடுகையில் இலங்கை அணி சற்று பலமாக உள்ளது. விண்டீஸ் அணிக்கு ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்ட நிலையில், இலங்கை அணி அதிர்ஷ்ட வாய்ப்பிற்காக தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று கடைசி லீக் ஆட்டத்தில் அதிக ரன்ரேட் வீதத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். இந்த வெற்றிக்குப் பின் புள்ளிகள், ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளை பின்னுக்குத்தள்ளி அதன் பின்னர் அரையிறுதி பற்றி சிந்திக்க வேண்டும். தான் செல்லக்கூடிய பாதை மிகவும் கடினமானது என்றாலும் முதலில் விண்டீசை வீழ்த்தினால் அரையிறுதி திட்டம் எல்லாம் சரியாகும் என்ற கணக்குடன் இலங்கை களமிறங்குகிறது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தால் எங்களுக்கும் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையுடன் விண்டீஸ் அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றியில் மட்டுமே குறியாக இருப்பதால் செஸ்டர் லே ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டம் பரபரப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை 33% வாய்ப்பு
செஸ்டர் லே ஸ்ட்ரீட் நகருக்கு வெயிலும் மழையும் மாறி மாறி சுற்றுலாவாக வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் எப்பொழுது மழை பெய்யும் என்பதை கணிக்கமுடியாது.இருப்பினும் இன்றைய தினம் மழைக்கு சாதகமான சூழல் உள்ளது.
ஆடுகளம் எப்படி?
இங்கிலாந்து நாட்டின் குட்டி மைதானங்களில் இதுவும் ஒன்று. செவ்வக வடிவில் அமைத்துள்ள இந்த மைதானத்தில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் சரிசமமாக எடுபடும். பரப்பள வில் சிறியதாக இருப்பதால் ரன் மழை பொழியலாம்.