எந்தப் படிப்பை எடுத்தாலும் அதன் மூலம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது முக்கியம். சேரப்போகும் துறையில் பணியாற்றுவது விருப்பமா அல்லது அந்தத் துறையில் பணி கிடைப்பது எளிதா... விருப்பம் என்றால் தாராளமாக அதை எடுக்கலாம். அதே வேளையில், முதுகலைப்படிப்பைப் படிக்கவும் தயாராகிக் கொள்ளுங்கள். வேலைக்காகப் படிக்கிறீர்கள் என்றால், இப்போது அந்தத்துறையின் நிலைமை அவ்வளவு சரியானதாக இல்லை. பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அந்த அளவுக்கு முன்னேற்றம் காணப்படவில்லை. ஒருவேளை, உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அந்தத் துறையில் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என்றால் இது போன்ற படிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.