tamilnadu

img

மதவாத சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவோம்!

கள்ளக்குறிச்சி, செப். 12- மதவாத சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை வலுப் படுத்துவோம் என்று கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலை வர் தெரிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் 17ஆவது மாநில  மாநாட்டையொட்டி கள்ளக்குறிச்சி யில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி பேசுகையில், “1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றியது ஏதோ இரவில் நடந்த நிகழ்வு அல்ல. ஏராள மான போராட்டங்கள் தியாகத் தால் நடத்தப்பட்டது” என்றார்.

பகத்சிங் வாரிசுகள்

சுதந்திரத்தை பற்றிப் பேச சவார்க்கர்கள் கூட்டத்திற்கு தகுதி யில்லை என்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பகத்சிங், சுகதேவ், ராஜகுரு எங்களை தூக்கிலிடா தீர்கள் நெஞ்சிலே சுடுங்கள் என  கடிதம் எழுதி கொடுத்தனர். அந்த  பரம்பரையில் வந்த இயக்கம்தான் ஜனநாயக வாலிபர் சங்கம் என்றும் கூறினார்.

பாஜகவால் ஆபத்து

பல்வேறு மாநிலங்கள் ஒருங்கிணைந்த ஒன்றியம்தான் இந்தியா. இங்கு பல்வேறு மொழி கள் கலாச்சாரங்கள் பேசும் மக்களுக்கு அடிப்படையாக உள்ளது அரசியலமைப்புச் சட்டம். தலித், பழங்குடி உள்ளிட்ட மக்க ளின் வேற்றுமையில் ஒற்றுமைக் காக அரசியல் அமைப்பு சட்டம்  பக்க பலமாக உள்ளது. ஆனால், ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என அரசியலமைப்புச் சட்டத்தை அடித்து நொறுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு.  இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் 2024 ஆம் ஆண்டு நடை பெறும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் அல்ல. கொள்ளை யர்களிடமிருந்து நாட்டை பாது காக்க இடதுசாரிகளையும், ஜன நாயக அமைப்புகளையும் வலுப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் எனவும் கூறினார்.

புதிய வழி காட்டும் கேரளா!

ஒன்றிய அரசு கேரள மாநி லத்தில் தனியாருக்கு தாரை வாக்கும்  பொதுத்துறை நிறு வனங்களை மாநில அரசு ஏற்று வெற்றிகரமாக நடத்தி இளைஞர் களுக்கு வேலை வழங்கி வரு கிறது. அதன் அடிப்படையில் கேரளாவில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 361 இளைஞர்களுக்கு மாநில அரசு வேலை கொடுத்துள்ளது. இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் வீடு, நிலம்  வழங்கி புதிய மாற்றத்தை உரு வாக்கி வருகிறது.  இந்தியா பட்டினி குறியீட்டில் முன்னேறி வரும் நிலையில் கேரளா அரசு புது  மாற்றத்தால் முன்னேறிச்செல்கிறது. நாட்டை அம்பானி, அதா னிக்கு விற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக குரலை வலுப்படுத்த வேண்டும். அதனை ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சியில் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க பேரணி அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.  ரெஜீஸ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.பாலா மற்றும் பலர் உரையாற்றினர். தெருக்குரல் அறிவு, சாகித்திய அகாடமி யுவ புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர்கள் சக்தி, சபரிநாதன், காளிமுத்து ஆகி யோருக்கு பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பிரதிநிதிகள் மாநாடு

திங்களன்று வாலிபர் சங்கத்தின்  17-ஆவது மாநில மாநாட்டுக் கொடியை மாநாட்டு முகப்பில் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார் பிரதி நிதிகளின் முழக்கத்தோடு ஏற்றி வைத்தார். பிறகு, தியாகிகளின் ஸ்தூபிக்கு சங்கத்தின் தலை வர்கள் மற்றும் மாநாட்டு பிரதிநிதி கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் தலைமையில் துவங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் அஞ்சலி தீர்மானத்தை மாநில இணைச் செயலாளர் பாலச்சந்திரபோஸ் வாசித்தார். மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் அனைவரையும் வரவேற்றார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலச் செய லாளர் எஸ். பாலா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இந்திய  மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் க. நிருபன் சக்கரவர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கில் நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது. வாலிபர்  சங்கத்தின் முன்னாள் தலை வர்கள் என்.குணசேகரன், கே. சாமுவேல்ராஜ், அ. பாக்கியம், டி.எம் ஜெய்சங்கர், எம்.செந்தில், ஜி.ஆனந்தன், டி. ஏழுமலை, பி. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்ட னர். 

;