tamilnadu

img

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு

சேலம், அக்.26- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்த நிலையில், தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு ஞாயிறன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைந்துள்ளது. அதன்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு வரும் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர், நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடியும், உபரிநீர் போக்கி வழியாக விநாடிக்கு 12,700 கனஅடியும், மேல்மட்ட மதங்கள் வழியாக கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.