tamilnadu

img

2045ல் அனைவருக்கும் தூய்மையான நீர் சோசலிச வியட்நாமின் இலக்கு

ஹனோய், டிச.23- 2045 ஆம் ஆண்டுக்குள் வியட்நாம் மக்கள் அனைவருக்கும் தூய்மையான நீரைத் தரும் இலக்கை அந்நாட்டின் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறையும், ஐ.நா. குழந்தைகள் நிதியமும்(யுனிசெப்) அறிவித்துள்ளன. இதன் முதல்கட்டமாக, 2030 ஆம் ஆண்டுக்கான இலக் கையும் நிர்ணயித்துள்ளனர். தூய்மையான நீர் விநியோகம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையும் 65 விழுக்காடு மக்களுக்கு உறுதிப்படுத்துவதே அந்த இலக்காகும். வியட்நாமின் சுகாதாரத் துறை நிர்ணயித்துள்ள தரத்துடன் அந்த நீர் இருக்கப் போகிறது. அதேவேளையில், 2030க்குள் அனைத்துக் குடும்பங்கள், பள்ளி கள் மற்றும் சுகாதார மையங்கள் அனைத்திற்கும் கழிப்பறை வசதிக ளைச் செய்யவுள்ளனர். 2045 ஆம் ஆண்டுக்குள் பெரும் இலக்குகளை நிர்ணயித்துள் ளனர்.

தூய்மையான நீர் மற்றும்  பாதுகாப்பான சுகாதாரத்தை உத்த ரவாதப்படுத்தப் போகிறார்கள். கிராமப்புறத்தில் 50 விழுக்காடு குடியிருப்புப்பகுதிகளில் கழிவுநீரைச் சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்தும் திட்டம் உள்ளது.  பத்தாண்டுகளுக்கு முன்பாக, கிராமப் புறங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் தூய்மையான நீரைத் தரு வதற்கான இலக்கை நிர்ணயித்திருந்தார்கள். 2020 ஆம் ஆண்டில் 88.5 விழுக்காடு குடும்பங்களுக்கு அதைத் தருவதில் வெற்றி பெற்றி ருக்கிறார்கள்.

கிராமப்புறத்தில் உள்ள குடும்பங்களில் 75 விழுக்காட் டினரிடம் அடிப்படை வசதிகளைக் கொண்ட கழிப்பறைகள் இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் வியட் நாம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகிறார்கள். சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் உத்வேகத்தை இந்தப் புதிய திட்டம் தரப்போகிறது. இந்தத் திட்டம் குறித்துப் பேசிய யுனிசெப் பிரதிநிதி ரானா பிளவர்ஸ், “மனித வள மேம்பாட்டில் தூய்மையான நீரும், கிராமப்புற சுகாதாரமும் மையமானவையா கும். இது உற்பத்தியை அதிகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் உதவும்” என்றார்.

;