tamilnadu

img

மேற்குவங்கத்தில் இடதுமுன்னணியின் எழுச்சிப் பேரணிகள்

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் அரசின் அடுத்தடுத்த ஊழல்கள், ஆசிரியர் தேர்வு முறைகேடுகள், அமைச்சர்களின்  லஞ்ச ஊழல்கள் ஆகியவற்றைக் கண்டித்தும் ஒன்றிய மோடி அரசின் கொள்கைகளால் அன்றாடம் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி நடத்தி வரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஆயிரம் ஆயிரமாய் மக்கள் அணிதிரண்டு வருகிறார்கள்.  பலூர்கட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.