tamilnadu

img

பெருங்களத்தூர்-வேளச்சேரி மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது

சென்னை, செப். 17 - வேளச்சேரி, பெருங்க ளத்தூர் பகுதிகளில் அமைக்கப் பட்டிருந்த மேம்பாலங்களை சனிக்கிழமையன்று (செப்.17) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நெடுஞ்சாலை துறை சார்பில் வேளச்சேரியில் சுமார் 78 கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலையையும், வேளச்சேரி - தாம்பரம் சாலையையும் இணைத்து மேம்பாலம் அமைக்கப் பட்டுள்ளது.  மேலும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத் தூரில், ஜிஎடி சாலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலங்களை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பர சன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;