tamilnadu

img

முதுபெரும் எழுத்தாளர் கர்ணன் காலமானார்

மதுரை, ஜூலை 20- முதுபெரும் எழுத்தாளர் பி. கர்ணன் மதுரையில் திங்களன்று காலமானார். அவருக்கு வயது 82.  1958 ஆம் ஆண்டு காவிரி இதழில் எழுத துவங்கினார். நாளி தழ்கள், வார, மாத இதழ்கள் ஆகியவற்றில் ஏராளமான சிறு கதைகள், நாவல், கட்டுரைகள், கவிதை, வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்டம் தொடர்பான நூல்கள் என நிறைய எழுதி குவித்தார். அவரது முதல் புத்தகம் கனவு பறவை சிறுகதை தொகுதி 1964 ஆம் ஆண்டு வெளியானது. அவர் சுதந்திரப் போராட்டம் தொடர் பாக 8 புத்தகங்களையும், வாழ்க்கை வரலாறு தொடர்பாக 7 புத்தகங்களையும் எழுதி யுள்ளார். மதுரையின் சுதந்திரப் போராட்டம் பற்றி மவுனத்தின் மின்னல் என்ற தலைப்பில் 320 பக்கம் கொண்ட புத்தகம் அண்மையில் அவரால் எழுதப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இவர்கள் இல்லாத நாம் என்ற தலைப்பில் ஓய்வூதியம் பெறா மல் அவதிப்படும் சுதந்திர போரா ட்ட தியாகிகள் பற்றி எழுத திட்டமிட்டிருந்தார். இந்நிலை யில் வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் 82 ஆவது வயதில் மதுரை செல்லூரில் உள்ள அவ ரது இல்லத்தில் திங்களன்று கால மானார்.

அவரது மனைவி பி.ரஞ்சிதம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கால மாகிவிட்டார். மாற்றுத் திறனாளி களான 2 சகோதரிகளுடனும், குழந்தைகளுடனும் வசித்து வந்தார்.  இவர் மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர். மணி கொடி கால எழுத்தாளர்கள் முதல் இன்றைய எழுத்தாளர்கள் வரை பலரும் அவருடன் தொடர்பில் இருந்தார்கள். அரசியல் தலை வர்கள் பலரும் அவரை அறிந்து வைத்திருந்தனர். 2005 ஆம் ஆண்டு அவர்கள் எங்கே போனார்கள் என்ற நூலை தமிழக அரசு சிறந்த புத்தகமாக அறிவித்தது. 2008 ஆம் ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அவரது எழுத்தாற் றலை பாராட்டி ரூ.20 ஆயிரம் வழங்கி கவுரவித்தது. 2012 ஆம் ஆண்டு கவிதை உறவு எனும் அமைப்பு வாழ்நாள் சாதனையா ளர் விருதை வழங்கியது.  தமிழக அரசின் எழுத்தாளர் களுக்கான சிறப்பு உதவியாக மாதம் ரூ.3 ஆயிரம் அவருக்கு வழங்கியது. வறிய நிலையி லேயே வாழ்ந்தவர், தனது ஏழ்மை யை பெரிதும் கருதாமல் எழுத்துக் களை சுவாசமாக கொண்டிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது இறுதி நிகழ்வு இன்று (செவ்வாய்) காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

;