கொச்சி, டிச.15- கண்ணூர் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் கோபிநாத் ரவீந்திரன் மீண்டும் நியமனம் செய்யப் பட்டதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நிய மனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி அமித் ராவல் தள்ளு படி செய்தார். விசி நியம னத்தை உறுதி செய்த நீதி மன்றம், மனுவை கோப்பில் கூட ஏற்கவில்லை. விசி நியமனத்துக்கு எதி ரான மனு நிலைக்கத்தக்க தல்ல என்றும், பொதுநல மனு வாக கருதப்பட வேண்டும் என்றும் அரசு சுட்டிக்காட்டியி ருந்தது. இந்த நியமனம் புதி யது அல்ல எனவும் மறு நிய மனம் செய்யப்பட்டதாகவும் அரசாங்கம் தெளிவுபடுத்தி யிருந்தது. துணைவேந்தரை நீக்கம் செய்ய உத்தர விடுமாறு செனட் உறுப்பி னர் டாக்டர் ஏ.எஸ். பிரேமச் சந்திரன் கீழோத்து மற்றும் அக்கடமிக் கவுன்சில் உறுப்பினர் ஷினோ பி ஜோஸ் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில், ஆளுநர் அரசுக்கு சமர்ப்பித்த கடிதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றத் தின் அனுமதியை மனுதாரர் கோரியிருந்தார். ஆனால், இந்த கடிதம் வழக்குக்கு தொடர்புடையது அல்ல என்று நீதிபதி அமித் ராவல் தெரிவித்தார்.