பல மாநிலங்களில் சங்பரிவார அமைப்புகள் வதந்திகள் மூலம் பல மத மோதல்களை உருவாக்கி இருக்கின்றன. மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திட மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.
கடந்த 02.06.2023 அன்று ஒடிசா மாநி லத்தில் பகாநகரில் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் மரணம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தனது விசாரணையை துவங்குவதற்கு முன்னதா கவே இந்த கோர ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய மோடி அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பகுதியில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிட்டிருந்தார்: “எந்தவொரு ரயில் விபத்தையும் முதலில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்தான் விசா ரிக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறை யில் உள்ள நிலையில் அந்த விசாரணை நடப்ப தற்கு முன்பே சிபிஐ விசாரணை நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது இந்த விபத்துக்கு ஒரு கிரிமினல் வடிவம் கொடுப்ப தற்கான முயற்சியே ஆகும்”.
மேலும், “ஒடிசா ரயில் விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய ரயில்வே யின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து மிக விரிவான அறிக்கையை ரயில்வே வாரியம் ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருக்கி றது” என்பதையும் சுட்டிக்காட்டி சீத்தாராம் யெச் சூரி விவரித்துள்ளார். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இப்படி என்றால், பாஜகவை சேர்ந்த சிலர் பால சோரில் நடந்த விபத்திற்கு வகுப்புவாத வண் ணம் பூசத் துவங்கிவிட்டனர். “280 மக்களைக் கொன்று, 900 மக்களை படுகாயம் அடையச் செய்த இந்த மனித உரு விலான காட்டேரி பெயர் அகமது ஷெரீப் . ஒடிசா வின் பகானகா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த லூப் லைனுக்கு எக்ஸ் பிரஸ் ரயில் செல்ல சிக்னல் தந்த மாபாவி இவன். விபத்து குறித்த விசாரணைக்கு உத்தர விடப்பட்டதிலிருந்து அகமது ஷெரீப் தலை மறைவாக உள்ளார். பாலசோரின் கொடூரமான ரயில் விபத்தின் முக்கியக் குற்றவாளி இவர். இப்போது தலைமறைவாக உள்ளார். இவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வரு கிறது”.
- இது சமூக வலைதளத்தில் பரவிய போது பலர் இப்பதிவை பகிர்ந்தனர். உண்மைத் தன்மையை கண்டறியும் ஆல்ட் நியூஸ் என்ற சமூக வலைதள நிறுவனம் மேற்கண்ட பதிவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து, அகமது ஷெரீப் என்ற ஒருவர் ரயில்வே பணி யில் இல்லை என்பதை கண்டறிந்து தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ளது. மேற்கண்ட தவறான பதிவை சமூக வலை தளத்தில் பகிர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே தொழி லாளி (தென்னிந்திய ரயில்வே) ஒருவருக்கு சிஐ டியு - தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர்களில் ஒருவராக பணியாற்றிய ஆர். இளங்கோவன், குறுஞ்செய்தி அனுப்பி அந்த பதிவை நீக்கும்படி கேட்டுக் கொண்டார். சம்பந்தப்பட்டவரும் பதிவை நீக்கிவிட்டார். ஆனால் மேற்கண்ட தவறான பதிவு ஏராள மானவர்களுக்கு ஏற்கனவே சென்றுவிட்டது.
மேலும் ‘ராண்டம் இந்தியன்’ என்ற ஒரு டிவிட்டர் பதிவாளர், விபத்து நடந்த பகுதியை டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஒரு படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு, விபத்து நடந்த பகுதிக்கு அருகில் ஒரு மசூதி இருப்பதாகவும், இதன் மூலம் விபத்துக்கும், இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்றும் ஒரு பொய்யான கருத்தை வலைதளத்தின் மூலம் விதைத்தார். இன்னொரு உண்மை தன்மையை அறியும் சமூக வலைதள நிறுவனம் இதுகுறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட படத்தில் உள்ளது மசூதி அல்ல, அது பகானகாவில் உள்ள இஸ்கான் கோவில் என்று கண்டறிந்து உண்மை வெளி யிட்டுவிட்டது. இஸ்லாமியர்கள் தான் பாலசோரில் நடந்த ரயில் விபத்துக்கு காரணம் என்று பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பி மக் களை நம்ப வைக்க பாஜக தலைமையிலான சங் பரிவார அமைப்புகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இத்தகைய வேலையைத் தான் ஜெர்மனி யில் ஹிட்லர் தலைமையிலான அமைச்சரவை யில் இடம் பெற்றிருந்த கோயபெல்சும், கோய ரிங்கும் செய்து கொண்டிருந்தனர். இந்தியா வில் கோயபெல்ஸ் பாணியில் சங் பரிவார அமைப்புகள் தொடர்ந்து பொய்யான தக வல்களையும், அறிக்கைகளாகவும் சமூக வலைதளப் பதிவுகளாகவும் வெளியிட்டு மத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதோடு மத மோதலையும் உருவாக்கி வருகின்றன.
தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைத் தலைவ ராக இருந்த மாரிமுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு தூக்கில் சடலமாகத் தொங்கினார். கைகள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக் கப்பட்ட அவரது சடலத்துக்கு அருகிலேயே மோடி படத்துக்கு செருப்பு மாலை அணி விக்கப்பட்டு பாஜக கொடியும் அவமரி யாதை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அத்துடன் 1, 2, 3, 4, 5 என எண்கள் குறிப்பி டப்பட்டு 3 என்ற எண் அடிக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியை வைத்து, பாஜக தலைவரை எதிரிகள் கொலை செய்து விட்டனர்; மேலும் பல பாஜக தலைவர்களை கொலை செய்வ தற்குத்தான் எண்களைப் பட்டியலிட்டுள்ளனர் என்றும் அக்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருப்பூருக்கு வந்து பாஜக தலைவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகவும் பேட்டியளித்துச் சென்றார். ஆனால் காவலர்கள் புலன் விசாரணை செய்த தில், குடும்ப காரணத்திற்காக மாரிமுத்து தற் கொலை செய்து கொண்டதும், பாஜகவினர் அவரது சடலத்தை வைத்து அரசியல் நாட கம் ஆடியதும் அம்பலமானது. உண்மை அம்ப லமான நிலையில், மத ரீதியாக இருதரப்பு மோதல் ஏற்படுத்த பாஜக எடுத்த முயற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை யீட்டினால் தடுக்கப்பட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் சங் பரி வார அமைப்புகள் இத்தகைய வதந்திகள் மூலம் பல மத மோதல்களை உருவாக்கி இருக் கின்றன. மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திட மதச்சார்பற்ற சக்திகள் மேலும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டிய தருணம் இது.