tamilnadu

img

எழுச்சியுடன் துவங்கியது மாற்றுத் திறனாளிகள் மாநாடு முதல்வர் பங்கேற்றார்

செங்கல்பட்டு,செப்.19- மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கோலாகல எழுச்சியுடன் துவங்கியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4 வது தமிழ் மாநில மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக திங்களன்று (செப்.19) மாலை 6 மணிக்கு மறைமலைநகர் நகராட்சி திடலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் பொது மாநாடு நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் பா.சு.பாரதிஅண்ணா வரவேற்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டு  பேருரையாற்றினார். சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் வி.முரளிதரன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மறைமலை நகராட்சித் தலைவர்  சண்முகம், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநில துணைச் செயலாளர்  ராஜா   உள்ளிட்ட பலர் உரையாற்றினர். வரவேற்பு குழு  பொருளாளர் வி.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கண்காட்சி

முன்னதாக,  சங்கம் துவங்கப்பட்டதிலிருந்து மாற்றுத்திற னாளிகள் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்க ளும்  ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.  முன்னதாக, செங்கை  போர்ப்பறை கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றன.  

இன்று பிரதிநிதிகள் மாநாடு

செவ்வாயன்று (செப். 20) மாநிலம் முழுவதும் இருந்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்கும் பொது மாநாட்டை மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்து பேசுகிறார்.

 

;