tamilnadu

கருத்தரங்கில் உருவான ஆலோசனைகள் முதல்வரிடம் அளிப்பு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வரு கின்றன. குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலும், வன்கொடுமையும் நீண்ட கால உடல் மற்றும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.  இது தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர்  நம்பிக்கையோடு  குழந்தைகளை அனுப்பி வைக்கும்  இடங்களில்  கல்வி நிலையம் முக்கியமா னது. அங்கேயே பாதுகாப்பு கேள்விக்குறியாவது பல்வேறு சிக்கல்களை விளைவிக்கும். எனவே  இப்பிரச்சனை தீவிரமானது எனப் பதிவு செய்வது அவசியமானது. 

தற்போது நிலவி வரும் நவீன தாராளமய சூழலும், சந்தை சித்தாந்தமும் சுயநலனையும், வக்கிரங்களையும் வளர்த்து விடுவதற்கான கள சூழலையும், மன சூழலையும் உருவாக்கு கின்றன. குறைவான தண்டனை விகிதம், குற்றமிழைக்க ஊக்குவிக்கிறது. அதிகரித்து வரும் போதை பழக்கமும், தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பக்க விளைவாக எளிதில் அணுக முடிகிற   ஆபாச வலைத்தள ஏற்பாடுகளும் வன்முறைக்கு உகந்த களத்தை அமைத்து கொடுக்கின்றன.  அண்மையில் வெளிவந்த பள்ளி மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் குற்றங்களில்  சில உடனடி தலையீடுகள் செய்யப்பட்டாலும், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும், அதற்கான கொள்கையும் நெறிமுறையும் வகுக்கப்பட வேண்டும் என்பதே முன்னுக்கு வருகிறது.  இப்பின்னணியில் தான் இதுகுறித்து ஆலோசனைகளை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இணைய வழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள், உளவி யல் ஆலோசகர், மாணவர், வாலிபர், பெண்கள் இயக்க தலைவர்கள், திமுக மகளிர் அணி  அமைப்பாளர், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை களை முன்வைத்தனர். அவற்றை தொகுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முதல்வரிடம் விரி வான மனுவாக அளித்துள்ளது.

;