திருக்குறளை அவமதித்து பேசிய ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை அனுப்பிவைக்கும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநிலம் முழுவதும் சனிக்கிழமையன்று (அக். 8) நடத்தியது. அதன் ஒருபகுதியாக வட சென்னை மாவட்டக் குழு சார்பில் பெரம்பூர் எம்.கே.பி நகர் தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சிங்காரவேலன், மாவட்டத் தலைவர் நித்தியராஜ், பொருளாளர் விஜயகுமார், மாநிலக் குழு உறுப்பினர்கள் அபிராமி, தமிழ் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.