நாகர்கோவில் டிச. 3 கட்டுமான தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிடபுள்யுஎப்ஐ தக்கலை வட்டாரக் குழு சார்பில் முட்டைக்காடு சந்திப்பில் வட்டார தலைவர் ஜாண் இம்மானுவேல் தலைமையில் மறியல் நடைபெற்றது. சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சந்திரகலா, பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜான் சௌந்தர ராஜ், சிபிஎம் வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் ஆகியோர் பேசினர் விவசாய சங்க மாவட்ட தலைவர் சைமன் சைலஸ் மறியலை துவக்கி வைத்தார். கட்டுமான நிர்வாகிகள் ஷீலா பீட்டர், அமலதாஸ், செபஸ்தி யான், அரங்கசாமி, சுரேஷ், முத்தை யன், திரேஸ் எலிசபத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இராஜாக்கமங்கலம்
கன்னியாகுமரி மாவட்ம் இராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடந்தது. சிடபுள்யுஏப்ஐ இராஜாக்க மங்களம் ஒன்றிய செயலாளர் கே.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார், சங்கத்தின் மாநில தலை வர் கே. பி பெருமான் மற்றும் சங்க நிர்வாகிகள் பி. குமரேசன், விஎம்எஸ். பாண்டியன் மற்றும் 3000 மறியலில் பேர் கலந்து கொண்டனர்
நாகர்கோவில்
சிடபுள்யுஎப்ஐ நாகர்கோவில் நகரக்குழு சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சங்கத்தின் வட்டார தலைவர் அசீஸ் தலைமை யில் மறியல் நடைபெற்றது.சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ் அந்தோனி, சிஐடியு மாவட்ட தலை வர் தங்கமோகனன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் ஏ உசேன், வட்டார செயலாளர் கே. மோகன் ஆகியோர் பேசினர். ஏராளமான கட்டு மான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருங்கல்
கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிள்ளியூர் ஒன்றியத்தை மார்த்தா ண்டம் நல வாரிய அலுவலகத்தில் இணைத்திட வலியுறுத்தியும், கருங்கல்லில் கட்டுமான சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் ரசல் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் சாந்த குமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சந்திரபோஸ், விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் கிருஷ்ணதாஸ், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பொன்.சோபன ராஜ் மற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த மறியலில் கலந்து கொண்டனர்