tamilnadu

img

விருதுநகரில் சிபிஎம் ஸ்தாபகத் தலைவர்கள் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

சிவகாசி, டிச.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட 23 ஆவது மாநாட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆம்பு லன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.     சிவகாசியில்  மார்க்சிஸ்ட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாவட்ட மாநாடு துவக்க நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. கட்சியின் ஸ்தாபகத் தலை வர்கள் மாரிமுத்து, தொண்டர் துரைச்சாமி ஆகியோரின் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா தலைமை ஏற்றார். நகரச்செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் வரவேற்றார். மூத்த தோழர் ஜே.லாசர் முன்னிலை வகித்தார்.  ஆம்புலன்சை கொடியசைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகமது துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவ காசி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.அசோ கன், ஒன்றிய துணைத் தலைவர் விவே கன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த் துரை வழங்கினர்.  வரவேற்புக் குழுத் தலை வர் பழனி நன்றி கூறினார்.

;