tamilnadu

ஷாங்காய் உச்சி மாநாடு; சீனா செல்கிறார் மோடி!

ஷாங்காய் உச்சி மாநாடு;  சீனா செல்கிறார் மோடி!

புதுதில்லி, ஆக. 7 - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 31 அன்று சீனா செல்கிறார். 2019-க்குப் பிறகு, மோடி முதல் முறையாக சீனா செல்கிறார். இந்த பயணம் சீனா - இந்தியா உறவைப் பெருமளவு மறு கட்டமைப்பு செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா தனது வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா  மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள் ளார்.  இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே உறவை மேலும் மேம்படுத்து வதாக அமையும் என்று  அரசியல் நோக்கர் கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அதற்கேற்ப, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் தியான்ஜினின் மாகாணத்தில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட எட்டு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். புடின் இந்தியா வருகை  இதனிடையே, ஷாங்காய் மாநாட்டிற்கு முன்னதாகவே, ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தியா வர உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.