tamilnadu

img

மாதர் சங்க மாநாட்டில் சாதனை பெண்கள் கவுரவிப்பு

தமிழ்நாட்டில் பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை, காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற பெண்களுக்கு கடலூரில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாட்டில் பாராட்டு தெரி வித்து கவுரவப்படுத்தப்பட்டனர். பார்வதி: சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’  திரைப் படத்தின் உண்மை நாயகியான பார்வதி  கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது கண வர் காவல்துறையினரின் கடுமையான தாக்கு தலால் பலியானார். இதை எதிர்த்து போராடி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தோடு இணைந்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.

ரேவதி

கடலூர் மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடு மையான சித்ரவதைக்குள்ளான ரேவதியின் கண வர் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. இதை யடுத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை தேடி வந்தார் ரேவதி. அவருக்கு ஆதரவாக போராட்  டம் நடத்தி, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு காவல்துறை யினர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்  தின் கீழும், கொலை வழக்கும் பதிவு செய்யப்  பட்டு, வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகி றது. தற்போது மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்  டப் பொருளாளராக பணியாற்றி வருகிறார் ரேவதி.

ஆணவக்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நந்தீஸ் -சுவாதி  சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்ட னர். சுவாதியின் பெற்றோர் நந்திஸ் - ஸ்வாதி இரு வரையும் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்து விட்டனர். இந்த சம்பவத்தில் நீதிக்காக போரா டிய நந்தீஸ் தாயார் திம்மம்மா.

திருவாரூர் நந்தினி

காதல் திருமணம் செய்து கொண்ட நந்தினி யை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார் கணவர். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் நந்தினியின் கர்ப்பம் கலைந்தது மட்டுமின்றி கணவரின் தூண்டுதலின்பேரில் கர்ப்பப்பை அகற்றப்பட்டதும் தெரியவந்தது. இதனால், மாதர் சங்கத்தின் உதவியை நாடிவந்த நந்தி னிக்கு ஆதரவாக களம் இறங்கியது மாதர் சங்  கம். இதனையடுத்து மாதர் சங்கம் நடத்திய  போராட்டத்தை தொடர்ந்து, சித்ரவதை செய்த  கணவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கணவரின் கொடுமைகளை எதிர்த்து போரா டியவர் நந்தினி.

துடியலூர் சிறுமி

கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை  கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். குற்ற வாளிகளை கைது செய்யும் வரை கோவை மாதர் சங்கம் தொடர்ந்து போராடி வந்தது. ஒரு வர் கைது செய்யப்பட்டார். 2019 டிசம்பரில் தூக்கு  தண்டனை என தீர்ப்பு வந்தது. குற்றவாளியின் மேல் முறையீட்டால் ஆயுள் தண்டனை பெற் றார். குழந்தையின் தாயாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதர் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி யது. மாதர் சங்கத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் அக்குழந்தையின் தாய் வனிதா.

இந்துமதி

வட சென்னை மாவட்டத்தில் கணவரால் மிக வும் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் இந்து மதி. அவரது மகளை கணவனே பாலியல் வன்  கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியது. உடைத்த கண்ணாடி பாட்டில்களின் துகள்களை மனைவி மற்றும் மகளையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து, மாதர் சங்க தலைவர்கள் தலை யிட்டு போராட்டம் நடத்தி வழக்குப் பதிவு செய்ய துணைநின்றவர் இந்துமதி.

ஸ்ரீமதியின் தாய்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி கள்ளக்  குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி யில் படித்து வந்த நிலையில் மரணமடைந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தாயார் செல்வி புகார் அளித்தார். அதன் மீது  எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில்  எனது மகளுக்கு நீதி கிடைக்க மாதர் சங்கம் உதவி செய்ய வேண்டும். அதன் மூலம் நீதிகிடைக்கும் நியாயம் வெல்லும். எனவே, மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டில் நான் பங்கேற்பேன் என்று மாநாட்டில் கலந்து கொண்டார்.

ஹரிணி, இளவரசி 

தியாக பூமியான மதுரை புறநகர் பொதும்பு கிராமத்தின் தியாகி பொதும்பு ராமையாவின் கொள்ளுப்பேத்தி ஹரிணி சிலம்பத்தில் உலக சாதனை படைத்தார். சுதந்திரப் போராட்டக் களத்தில் போராடிய தியாகி கடலூர் மாவட்டம் அஞ்சலை அம்மா ளின் கொள்ளுப்பேத்தி இளவரசி.