tamilnadu

img

போதைப்பொருள் விற்பனை - விநியோகத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்

வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள்

வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 17 வது மாநில மாநாட்டில் 79 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு  செய்யப்பட்டது. மாநிலத்தலைவராக எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளராக ஏ.வி. சிங்காரவேலன், பொருளாளராக எஸ்.பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர்களாக  எஸ்.மணிகண்டன், பி.லெனின், கே.ஆர்.பாலாஜி, எஸ்.எம்.சலாவுதீன், பி.சரவணத் தமிழன்; துணைச் செயலாளர்களாக செல்வராஜ், டி.எட்வின்பிரைட்,  எம்.கே.பழனி, டி. செல்வராஜ், எம்.பிரியங்கா ஆகியோர் உட்பட 25 மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, செப்.13- இளைஞர்கள் உள்பட அனைத்து தரப் பினரையும் சீரழித்திடும் போதைப் பொருள் விற்பனை மற்றும் விநியோகத் தைத் தடுக்க மாநில அரசு தீவிர நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17ஆவது தமிழ் மாநில மாநாடு வலி யுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் செப். 11 12, 13  ஆகிய மூன்று நாட்கள்  நடைபெற்ற  மாநாடு செவ்வாயன்று நிறைவடைந் தது.  இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் அமர்வு நடைபெற்றது. விவாதத்திற்குச் செயலாளர் எஸ்.பாலா பதிலளித்தார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரளா மாநிலச் செயலாளர் வி.கே ஷனோஜ் மாநாட்டை வாழ்த்திப்பேசினார்.  மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

விளையாட்டு போட்டிகள் நடத்துக!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தி  நீதி வழங்கிட வேண்டும்.  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மலைப் பகுதி மற்றும் மலை அடிவாரங்களில் உள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மலைவாழ் பழங்குடி மக்களுக்குப் பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும்,  வனத்துறையால் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் புதிய விளை யாட்டு மைதானங்களை உருவாக்கி ஒன்றிய மாவட்ட அளவில் விளை யாட்டுப் போட்டிகளை நடத்த அரசு உட னடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  தமிழக அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடன டியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசு புதிய வேலை வாய்ப்புகளையும் உரு வாக்கிட வேண்டும்.

ஜவுளித்தொழிலை பாதுகாத்திடுக!

தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை அளிக்கக் கூடிய ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.  நாளுக்கு நாள் அதிகமாகி வரும் போதைப் பொருள் விற்பனையால் சிறியோர் முதல் பெரியோர் வரை பள்ளி மாண வர்கள் முதல் சிறுவர்கள் வரை சீரழிந்து வருகின்றனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை, குடும்ப வன்முறையும் அதிகரித்து வரு கின்றது. இந்நிலையைக் கருத்தில் கொண்டு போதைப்பொருள் விற்பனை யைத் தடுத்திடவும், குடும்ப வன்முறை களைத் தடுப்பதற்கும் உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டும்.

பாலின சமத்துவ நடவடிக்கை 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போது, அதற்கெதிராக அரசு நிர்வாகம் உடனடி யாக எதிர்வினையாற்ற வேண்டும். ஏற்கனவே, நீதிமன்றத்தில் உள்ள பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்வு காண வேண்டும் . பெண் குழந்தை களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சிறப்புத் திட்டங் களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் .  உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு  சிறப்பான முறையில் நடைமுறைப் படுத்தப்பட அரசு தொடர் கண்காணிப் பில் ஈடுபட வேண்டும் . ஊடகங்களில் பெண்கள் குறித்த பிற்போக்குத்தன மான பார்வையுடன் கூடிய நிகழ்ச்சி களை ஒளிபரப்புவது தடுத்து நிறுத்தப் பட வேண்டும் .  பாலின சமத்துவ நட வடிக்கைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சியில் சொத்து வரி உயர்வை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் ஜேக் சி.தாமஸ் நிறைவுறையாற்றினார். கள்ளக்குறிச்சி வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்குமார் நன்றி  கூறினார்.

 

 

;