tamilnadu

img

படியில் பயணம் - கோவி.பால.முருகு

செல்வன் ஏழாம் வகுப்புப் படித்துக்  கொண்டிருந்தான். அன்றைக்கு மாலை பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்தான். அருகிலே இருக்கும் பேருந்து  நிலையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அங்கே நின்று கொண்டிருந்த எஸ்.ஆர்.வி.எஸ் பேருந்தைப் பார்த் தான். சிவப்பும் வெள்ளையும் கலந்து அழகாக இருக்கும் அந்தப் புதிய பேருந்தில் ஒருமுறை பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்ட  நாட்களாக இருந்து வந்தது. பேருந்தின் அருகில் சென்றவன் பின் பக்கம் இருக்  கும் ஏணிப்படியில் ஏறி நின்று கொண்  டான். வண்டி புறப்படும்போது இறங்கி விடலாம் என்றால் பேருந்து புறப்பட்டு விட்டது. இறங்க மனம் வரவில்லை. பேருந்து வேகமெடுத்தது. ஒரு பக்கத் தோளிலே கனமான புத்தகப் பை. கீழே  குனிந்து பார்த்தான். சாலை பின்னோக்கி  படுவேகமாக ஓடிக் கொண்டிருந்தது. தலை சுற்றியது. கண்களை இறுக மூடிக்  கொண்டு ஏணியை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டான். எப்படியும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடலாம் என்று நினைத்தி ருந்தான். அன்றைக்கு என்று பார்த்து, அவன் ஊருக்கு இடையிலுள்ள நான்கு  நிறுத்தத்திலும் பேருந்து நிற்கவில்லை. மனதில் பயம் தொற்றிக் கொண்டது. அவன் ஊருக்கு முன்னே மிகக் குறுக லான பாலத்தின் வளைவு இருந்தது. அதற்குக் “கோண மதகு” என்றே பெயர். எவ்வளவு திறமைசாலியான ஓட்டு நராக இருந்தாலும் மிகவும் வேகத்தைக்  குறைத்துத் தான் திரும்ப முடியும். அங்கே  இறங்கிவிடலாம் என்று முடிவெடுத் தான். அதோடு அடுத்த நிறுத்தம் அவனு டைய ஊர். யாராவது ஒருவர் பார்த்து விட்டாலும் போதும். ஆசிரியராக இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த என் அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள். அதற்குப் பிறகு அவன் தந்தையார் கொடுக்கும் தண்டனை மிகக் கடுமை யாக இருக்கும் என்ற பயமும் சேர்ந்து கொண்டது. கோணை மதகை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு அய்ம்பது அடி  தூரத்தில் ஏணியில் இருந்து அவ சரப்பட்டு குதித்து விட்டான். குதித்த வேகத்தில் குப்புற வீழ்ந்தான். தார்ச் சாலையில் ஒரு ஐந்தடி தூரத்திற்கு உடல்  இழுத்துச் செல்லப்பட்டது.

கை, கால்,  முட்டி என்று அனைத்து இடங்களும் தேய்ந்து தோல் நன்றாக வயண்டு போய்  இரத்தம் வழிந்தது. பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மண்ணியாற்றில் இறங்கி கிழிந்து அழுக்காய்ப் போன சட்டையைக் கழற்றி நன்றாக தண்ணீரில்  அலசிக் கொண்டான். பிறகு தேய்ந்தி ருந்த பகுதிகளைத் தண்ணீரில் இறங்கிச்  சுத்தப் படுத்தினான்.எ ரிச்சலும் வலியும்  தாங்க முடியவில்லை. அதோடு வீட்டிற்கு வந்தவனைப் பார்த்த அவனுடைய அம்மா பதறி விட்டார். அவன் அம்மாவிடம் உண்மை யைச் சொல்லிவிடுவான். நடந்ததைச் சொல்லியவன் “அப்பாவுக்குத் தெரிந்தால் அடித்தே கொன்று விடுவார்.  எனவே அவரிடம் சொல்லிவிடாதே என்றான். பக்கத்தில் இருக்கும் மருத்து வரிடம் அழைத்துச் சென்று காயங்க ளுக்கு மருந்தும் ஊசியும் போட வைத்து  வீட்டிற்கு அழைத்து வந்தார் அம்மா. அன்று இரவு அப்பா வருவதற்குள் படுத்துவிட்டான். அப்பா அம்மாவிடம் கேட்க “ஒரு பையன் சைக்கில்ல கூப்பிட்டான்னு அவன் கூட வந்தி ருக்கான். அவன் வேகமா சைக்கில ஓட்டி  வந்திருக்கான். ஒரு இடத்தில் மணல் வழுக்கிக் கீழே இரண்டு பேரும் விழுந்த்துட்டாங்களாம். இவனுக்கு கை, கால், முட்டி எல்லாம் தேஞ்சு போச்சு.  டாக்டர் கிட்டக் காமிச்சு மருந்து ஊசியெல்லாம் போட்டுகிட்டு வந்தேன்”  என்று ஒருவாறாகச் சமாளித்திருக்கி றார். அன்றைக்கு செல்வன் இன்னும் கொஞ்சம் முன்னே இறங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து வந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து இறங்கியிருந்தால் காயங்கள் இல்லாமல் தப்பித்திருக்கலாம். இதுபோல செல்வன் பட்ட அனு பவத்தை நீங்களும் பெறக்கூடாது. “படி யில் பயணம் நொடியில் மரணம்” என்று  சும்மாவா எழுதியிருக்கிறார்கள்.