tamilnadu

தாம்பூலத் தட்டில் 99 பூக்களை வரைந்து பள்ளி மாணவி சாதனை

ஊருக்குள் 
பிணம்போக வழியில்லை
பணம்போக
எட்டுவழிகள்...


கோயில்..தர்கா...தேவாலயம் என சமத்துவமாய்
உண்டியலில்
காணிக்கை செலுத்தினேன்
ஒரே நாடு
ஒரே நாணயம்
உண்டியலில்தான் வேறுபாடு.

அரசு வாகனம்
பாதியில் நின்றது
அதுவும்
எல்லோரும்
பின்னாடி ‘தள்ள’ தானாய்ச்செல்கிறது.

பெண்களுக்கு
நூறு சதம் இட ஒதுக்கீடு
நூறுநாள் வேலையில்..

ஏழை வீட்டில் ஜப்தி
தூக்கிவீசப்பட்டது
அடுப்படிப்பூனை.
- அய்யாறு ச.புகழேந்தி