மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் என்.சங்கரய்யாவின் 102ஆவது பிறந்த நாளையொட்டி பெரம்பூர் பகுதி 37, 46ஆவது வட்டக் கிளைகளின் சார்பில் டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், ஆகியோர் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினர்.