கோயம்புத்தூர், அக்.14- ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான என்டிசி பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். குறை ந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி என்டிசி தலை மை அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்கங்களின் தலைமையில் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான என்டிசி 13 மாநிலங் களில் 23 ஆலைகள் இயங்கி வந்தன. கொரோனா தொற்றை காரணம் காட்டி ஆலைகளை மூடிய ஒன்றிய அரசு, தற்போது வரையில் சட்ட விரோதமாக திட்டமிட்டே ஆலை களை இயக்கவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் மட்டும் கொடுத்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அத னையும் நிர்வாகம் வழங்கவில்லை. ஆனால் நிர்வாகத்தில் உள்ள அலுவலர், அதிகாரிகளுக்கு மட்டும் முழுச்சம்பளத்தை மாதாமாதம் கொடுத்து விடுகின்றனர். அனைத்து என்டிசி ஆலைகளை இயக்க வேண்டும். தொழிலாளர் களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும். கடந்த 10 மாதங்களாக பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட வில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும். என்டிசி பஞ்சா லைக்கு சொந்தமான 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஊழியர்களின் உழைப்பால் உருவானவை. இதனை ஒன்றிய அரசு பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் அடிமாட்டு விலைக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தொழிற்சங்க தலை வர்கள் கூறுகையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேவ் என்டிசி அமைப்பின் சார்பில் கேரளா, கர்நாடகா, மத்தியப்பிர தேசம், மகாராஷ்டிரா, குஜராத், கொல்கத்தா ஆகிய மாநிலங்களி லும் இப்போராட்டம் நடைபெறு கிறது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். போராட்டத்தையடுத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு தலைவர் சேவியர், பத்மநாபன், எச்எம்எஸ் ராஜமணி, எம்எல்எஃப் தியாகராஜன், ஐஎன்டியுசி வி.ஆர்.பாலசுந்தரம், ஏடிபி கோபால், என்டிஎல்எஃப், ஏஐடியுசி பொன்ராஜ், அம்பேத்கர் யூனியன் தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர். இதில், தீபாவளிக்கு முன்னர் சுமூகத் தீர்வை எட்டுவது என முடிவெடுக்கப் பட்டுள்ளதாக தலைவர்கள் தெரி வித்தனர்.